வரலாறு காணாத வகையில் உயர்ந்த ஜெர்மனி மக்கள் தொகை

சமீபத்திய குடியேறிகளின் வருகை காரணமாக ஜெர்மனியின் மக்கள் தொகை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. 82.8 மில்லியன் மக்கள் ஜெர்மனியில் வாழ்வதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AP

இந்த எண்ணிக்கை 2002ல் இருந்த முந்தைய பதிவுகளை முறியடித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜெர்மனியில் இருந்து வெளியேறியவர்களைக் காட்டிலும் ஜெர்மனிக்குள் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நுழைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் குறைந்த பிறப்பு விகிதத்தை இந்த எண்ணிக்கை ஈடு செய்து விஞ்சுகிறது.

1972 ஆம் ஆண்டு முதல், ஜெர்மனியில் இறந்தவர்களைக் காட்டிலும் ஐந்து மில்லியனுக்கும் குறைவான மக்கள் தான் பிறந்துள்ளனர்.

ஜெர்மனியின் வளரும் பொருளாதாரத்திற்கு அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இளம் குடியேறிகளின் வருகை இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று பார்க்கப்படுகிறது.