தெற்கு சோமாலியாவில் ராணுவ தளம் மீது தீவிரவாத குழு தாக்குதல்; 57 படையினர் பலி

தெற்கு சோமாலியாவில் உள்ள கென்யா நாட்டின் ராணுவ தளம் மீது இஸ்லாமியவாத தீவிரவாத குழுவான அல்-ஷபாப் தாக்குதல் நடத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

குல்பியோ நகரிலிருந்த முகாமில் சுமார் 57 கென்யா படையினர்களை போராளிகள் கொன்றிருப்பதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

வெடிப் பொருட்கள் நிரப்பட்டப்பட்ட டிரக் ஒன்றை வைத்த தாக்குதலை தொடங்கியதாகவும், தளத்தை கைப்பற்றியதோடு மட்டுமின்றி காட்டுப்பகுதிக்குள் படையினர்களை விரட்டிச்சென்றதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது.

ஆனால், கென்யா ராணுவம் இதனை மறுத்துள்ளது. மேலும், இதனை தீவிரவாதிகளின் பிரசாரம் என்று கூறி உள்ள ராணுவம், தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்தியதாகவும், 20க்கும் மேற்பட்டவர்களை கொன்றதாகவும் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்