அமெரிக்காவில் நுழைய சிரியா அகதிகளுக்கு நான்கு மாதங்கள் தடை

தன்னுடைய நிர்வாகம் சிறந்த முறையில் கண்காணிப்பு நடைமுறைகளை கடுமையாக்கும் நேரம் வரை, சிரியா அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை செய்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

டிரம்பின் ஒரு செயலதிகார ஆணை, எல்லா அகதிகளின் அனுமதியை நான்கு மாதங்களுக்கு இடைநிறுத்தியும், தீவிர சோதனை மேற்கொள்ள உத்தவிட்டும் குடியேற சாத்தியமாகும் பலர் மீது கடும் நடவடிக்கைகளை விதித்திருக்கிறது.

மெக்ஸிகோ பொருட்களுக்கு வரி விதித்து எல்லை சுவருக்கு நிதி திரட்ட டிரம்ப் திட்டம்

"குறிப்பிட்ட கவனம்" செலுத்தக்கூடிய நாடுகளின் குடிமக்களுக்கு 3 மாதங்களுக்கு விசா வழங்குவதையும் இந்த ஆணை இடைநிறுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெறுகின்ற நாடுகள் பற்றி உடனடியாக தெளிவாகத் தெரியவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

தீவிர இஸ்லாமியவாத தீவிரவாதிகளை அமெரிக்காவில் நுழைய விடாமல் இருக்க செய்யும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கை அகதிகளின் வருகையை ஆதரிப்போரால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

டிரம்ப் கொள்கை எதிர்ப்பாளர்களுக்கு ஐ.நாவுக்கான புதிய அமெரிக்க தூதர் எச்சரிக்கை விடுப்பு

தீவிர சோதனை என்பது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையை மறைமுகமாக கூறுகின்ற விதம் என்று தெரிவித்திருக்கும் அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம், அகதிகள் நுழைவதை தடுத்திருப்பது, அவர்கள் தான் அமெரிக்காவை பாதிப்புற செய்கிறவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளது,

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ஆணை அமெரிக்க கோட்பாடுகளை மீறுகின்ற ஒன்று என்று குடியரசு கட்சியின் செனட் அவை உறுப்பினர் எலிசபெத் வாரன் கூறியிருக்கிறார்.

வன்முறை மற்றும் போரால் உயிர் தப்பி வருகின்ற குழந்தைகள் அமெரிக்காவில் நுழைவதை அதிபர் டொனால்ட் டிரம்ப் தடுத்திருப்பது தன்னை மனமுடையச் செய்துள்ளதாக நோபல் பரிசு வென்ற மலாலா யுசுஃப்ஸாய் கூறியிருக்கிறார்.

டிரம்பின் உத்தரவும் கருக்கலைப்பு பிரச்சினையும்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
டிரம்பின் உத்தரவும் கருக்கலைப்பு பிரச்சினையும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்