காம்பியா சிறை துறையின் முன்னாள் தலைவர் கைது

கினி-பிசாவை கடக்க முயற்சிக்கையில், காம்பியா சிறை துறையின் முன்னாள் தலைவர் தளபதி போரா கோல்லேயை கைது செய்ததாக செனகோல் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP

புதன்கிழமை கைது செய்யப்பட்ட அவர், பின்னர் செனகல் ராணுவத்திடம் கையளிக்கப்பட்டதாக, காவல்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

சித்ரவதை மற்றும் தன்னிச்சையான மரண தண்டனைகள் உள்பட பெருமளவிலான அரசியல் மற்றும் சமூக அடக்குமுறைகள் முன்னாள் அதிபர் யாக்யா ஜாமே ஆட்சியில் சிறைகளில் நடைபெற்றதாக மனித உரிமை குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

கடந்த சனிக்கிழமையன்று யாக்யா ஜாமே நாட்டைவிட்டு வெளியேறி செல்ல, செனேகோல் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்