ஆப்ரிக்காவின் சிறந்த புகைப்படங்கள்

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆப்ரிக்க கோப்பைக்கான கால்பந்து போட்டியில் டோகோ தேசிய கால்பந்து அணி திங்கள்கிழமை மேற்கொண்ட பயிற்சியை கவனிக்கும் கபோன் தொழிலாளர்கள்
படத்தின் காப்புரிமை EPA
Image caption ஊதிய உயர்வு கோரி நூற்றுக்கணக்கான கென்ய மருத்துவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் நைரோபியின் மத்தியில் வியாழக்கிழமை நடத்திய போராட்டம்.
படத்தின் காப்புரிமை EPA
Image caption துனிஷியாவின் டேஸியுரில் நடைபெற்ற கலாசார நிகழ்வான ஒயாஸிஸ் பண்டிகையின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று, லிபியாவின் கிராம குழுவை சேர்ந்த ஒருவர் அவருடையே பாரம்பரிய மோதிரத்தை காட்டுகிறார்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஞாயிற்றுக்கிழமையன்று தனாகில் பள்ளத்தாக்கிலுள்ள உப்பளத்தில் கையால் எடுக்கப்பட்ட உப்பை சுமந்து செல்லும் எத்தியோப்பிய ஒட்டகங்கள். பூமியிலுள்ள மிகவும் வெப்பமான மற்றும் வாழ்வதற்கு மிகவும் சவாலான இடங்களில் ஒன்றில் நடைபெறும் பழைய வர்த்தகம் இதுவாகும்.
படத்தின் காப்புரிமை AFP
Image caption மொராக்கோவின் பகுதிகளில் குளிர் அதிகரித்து காணப்படுகையில், வெள்ளிக்கிழமையன்று இஃப்ரானே நகரத்தில் பனியில் நடந்துசெல்லும் நபர்.
படத்தின் காப்புரிமை AFP
Image caption செவ்வாய்கிழமையன்று மொராக்கோ, ஐவரி கோஸ்டை தோல்வியடைய செய்து, நாடுகளுக்கு இடையிலான கோப்பையின் காலிறுதி கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற வெற்றி கொண்டாட்டங்கள் ரபாத்தின் தெருக்களில் இடம்பெற்றன.

பந்தய புறாக்கள் (புகைப்படத் தொகுப்பு)

படத்தின் காப்புரிமை EPA
Image caption சனிக்கிழமையன்று லைபீரியாவில் ஜனநாயக மாற்றத்திற்கான எதிர்க்கட்சி கூட்டணியால் நடத்தப்பட்ட மன்ரோவியா பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அக்டோபர் மாதம் நடைபெறுகின்ற லிபியாவின் அதிபர் தேர்தலில் முன்னாள் கால்பந்து வீரர் ஜார்ஜ் வியா, சார்லஸ் டெய்லரின் முன்னாள் மனைவியோடு போட்டியிட இருக்கிறார்.
படத்தின் காப்புரிமை AFP
Image caption வெள்ளை மாளிகையில் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற ஒரு நாளுக்கு பின்னர், உலக அளவில் பெண்களின் போராட்டங்கள் நடைபெற்றன. தென் ஆப்ரிக்க நகரான டர்பனின் தெருக்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் தேர்தலுக்கு பிறகு உருவான குழப்பங்களுக்கு பிறகு இறுதியில், 22 ஆண்டுகள் காம்பியாவை ஆண்டு வந்த யாக்யா ஜாமே நாட்டைவிட்டு வெளியேறியதை தொடர்ந்து, அவருடைய சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

மேலதிக புகைப்படத் தொகுப்புகளுக்கு:

ஜல்லிக்கட்டு போராட்டமும், பொதுமக்களின் நூதன எதிர்ப்பும் (புகைப்படத் தொகுப்பு)

ஜல்லிக்கட்டு காளைகள் (புகைப்படத் தொகுப்பு)

ஐந்தாவது நாளாக தொடரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்