அதிபர் டிரம்பின் தடை அறிவிப்புகளை அமல்படுத்தும் நடவடிக்கையில் பாதுகாப்புத்துறை தீவிரம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இராக் மற்றும் ஏமனிலிருந்து வந்த குறைந்தது ஏழு பேர் அமெரிக்காவிற்கு செல்ல முறையான விசா இருந்தும் எகிப்தில் விமானத்திற்குள் ஏற விடாமல் தடுக்கப்பட்டனர்.

நியுயார்க்கில் உள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில், இரு இராக்கிய அகதிகள் தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த தடை உத்தரவு அமலாவதற்குமுன், அமெரிக்காவுக்கு உடனடியாக திரும்பும்படி வெளிநாடுகளுக்கு சென்றுள்ள சில ஊழியர்களை கூகுள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்