போராளிகள் வசமிருந்த முக்கிய தண்ணீர் விநியோகிக்கும் பகுதியை மீட்ட சிரியா ராணுவம்

டமாஸ்கஸ் நகருக்கு முக்கிய தண்ணீர் விநியோகிக்கும் பகுதி ஒன்றை போராளுடனான பல வாரகால சண்டைக்குபிறகு கைப்பற்றியுள்ளதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டமாஸ்கஸ் நகருக்கு முக்கிய தண்ணீர் விநியோகிக்கும் பகுதியாக ஐன் அல்-பிஜிர் நகரம் விளங்கி வந்தது.

வாதி பராடா பகுதியில் உள்ளடமாஸ்கஸ் நகருக்கு முக்கிய தண்ணீர் விநியோகிக்கும் பகுதியாக ஐன் அல்-பிஜிர் நகரம் விளங்கி வந்தது. நகரில் இருக்கும் ஓர் உந்து வசதி நிலையம் மீது தற்போது தேசிய கொடி பறந்து கொண்டிருப்பதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அந்த பகுதியில் போராளிகள் ஆயுதத்தை கீழே போட வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் என்ற ஓர் ஒப்பந்தத்தின் அங்கமாக ராணுவம் அங்கு நுழைந்துள்ளதாக பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகமானது தெரிவித்துள்ளது.

இந்த சண்டடையின் போது நிலையத்திலிருந்த நீர் உந்து அமைப்பு சேதமடைந்துள்ளதால் டமாஸ்கஸுக்கு கடும் தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்