நாடு கடத்தல் தொடர்பாக டிரம்ப் விதித்த ஆணைக்கு நீதிமன்றம் தற்காலிக தடை

ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் அகதிகள் மற்றும் பயணிகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமத்திய பயண கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஒரு சட்ட ரீதியான வெற்றியை அதற்கு எதிராக பிரசாரம் செய்து வருபவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

வெள்ளிக்கிழமையன்று இது தொடர்பாக டிரம்ப் கையெழுத்திட்ட ஆணையின் விளைவாக கைது செய்யப்பட்ட யாரையும் நாடு கடத்தக் கூடாது என்று தாற்காலிக தடை விதித்து நியூ யார்க்கில் உள்ள ஒரு மத்திய நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு அமெரிக்க ஜனநாயகத்துக்கு அரணாக நீதிமன்றங்கள் உள்ளன என்பதை நிரூபிப்பதாக அமெரிக்க சிவில் உரிமைகளுக்கான ஒன்றியம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Image copyrightTWITTER / ACLU
Image caption அமெரிக்க சிவில் உரிமைகளுக்கான ஒன்றியம் வெளியிட்ட டிவிட்டர் செய்தி

அமெரிக்காவெங்கும் உள்ள விமான நிலையங்களில் இந்த தடை உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

முன்னதாக, இந்த புதிய சட்ட விதிகள் மிகவும் நன்றாக அமல்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்