ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நடிகர் சிம்பு கோரிக்கை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்ட காரணத்திற்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ள நடிகர் சிம்பு, தனது கோரிக்கை ஏற்கபடாத பட்சத்தில் தான் புதிய போராட்டத்தை துவக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் முதல் அவசரச்சட்டம் வரை : பிபிசி தமிழின் சிறப்பு பக்கம்

Image caption ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நடிகர் சிம்பு கோரிக்கை

சென்னையில் இன்று (ஞாயிற்று கிழமை) செய்தியாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நடிகர் சிம்பு, ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டம் குறித்து பேசினார்.

அப்போது, யாருடைய தலைமையையும் ஏற்காமல் மக்கள் ஒன்று கூடி நடத்திய இந்த போராட்டம், அறவழியில் நடைபெற்றது என குறிப்பிட்டார்.

சென்னை மெரீனாவில் 144 தடையுத்தரவு

மேலும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களை, கலவரத்தில் முடிக்க திட்டம் தீட்டப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிம்பு அப்போது குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் அப்போராட்டத்தில் பங்கேற்றவர்களின் மத அடையாளங்களை கொண்டு அவர்களை விமர்சனம் செய்வதையும் ஏற்க முடியாது என்றும் சிம்பு தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் : தீக்கிரையாக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் (புகைப்படத் தொகுப்பு)

இதற்கிடையே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற கைது நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து பேசியதாக, இன்று செய்தியாளர்களிடையே பேசிய நடிகர் இயக்குனர் லாரன்ஸ் தெரிவித்தார்.

தமிழக திரையுலகை சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்திற்கு தொடர்ந்து துணை நின்றுள்ள சூழலில், தற்போது இதே விவகாரத்தில் கைதாகியவர்களை விடுவிக்க கோரியும் அவர்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்ப துவங்கியுள்ளார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்