ஏமனில் தீவிரவாதிகள் மீது அமெரிக்க கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் 41 பேர் கொலை

மத்திய ஏமனில் அமெரிக்க கமாண்டோக்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் ஒன்றில் 40க்கும் மேற்பட்ட அல்-கய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஏமன் அதிகாரிகள் மற்றும் பழங்குடியின தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்புப்படம்

அல்-பைடா மாகாணத்தில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் பல அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாக்லா மாவட்டத்தில் 45 நிமிடங்களுக்கு நீடித்த இந்த சண்டையில் பலியானவர்களில் மூன்று அல்-கய்தா தலைவர்களும் அடங்குவார்கள்.

ஆனால், இந்த தாக்குதல் நடவடிக்கை குறித்து இதுவரை அமெரிக்காவிடமிருந்து உறுதிப்படுத்தப்படவில்லை.

ஏமனில் உள்ள அல்-கய்தா மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Image caption ராணுவ நடவடிக்கையில் பல அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

41 தீவிரவாதிகள் மற்றும் 16 பொதுமக்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெலிகாப்டர்கள் மருத்துவமனை ஒன்றையும், பள்ளி மற்றும் மசூதியை குறிவைத்ததாக மாகாண அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்