மியான்மாரில் ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னணி உறுப்பினர் சுட்டுக்கொலை

மியான்மாரில் ஆளுங்கட்சியான என் எல் டி எனப்படும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியை சேர்ந்த முன்னணி உறுப்பினர் ஒருவர் யங்கூன் விமான நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption என் எல் டி கட்சியில் சட்ட ஆலோசகராகவும், முன்னணி முஸ்லிம் உறுப்பினர்களில் ஒருவராகவும் கோ நி விளங்கி வந்தார்.

ஆங் சான் சூசி தலைமையிலான என் எல் டி கட்சியில் சட்ட ஆலோசகராகவும், முன்னணி முஸ்லிம் உறுப்பினர்களில் ஒருவராகவும் கோ நி விளங்கி வந்தார்.

மியான்மாரின் ரொஹிஞ்சா சிறுபான்மையினத்திலிருந்து சில தலைவர்களும் மற்றும் பிற முஸ்லிம் தலைவர்களுடன் இந்தோனீஷியாவிற்கு அரசு தலைமையிலான பயணம் ஒன்றை மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பிய நிலையில் அவர் தலையில் சுடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், சந்தேக நபர் ஒருவரை அதிகாரிகள் தடுப்புக்காவலில் எடுத்துள்ளனர்.

ஆனால், அவர் யார் என்ற விபரம் மற்றும் இந்த கொலைக்கான காரணம் குறித்து எந்த மேலதிக தகவல்களும் இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்