அமெரிக்க அதிபரின் நிர்வாக ஆணைகள் என்றால் என்ன?

பராக் ஒபாமா நிர்வாக ஆணைகளை அபூர்வமாகத்தான் பயன்படுத்தினார்.

படத்தின் காப்புரிமை EPA

டொனால்ட் டிரம்ப், அவர் பதவியேற்ற முதல் வாரத்திலேயே, குறைந்தது நான்கு ஆணைகளைப் பிறப்பித்திருக்கிறார்.

நிர்வாக ஆணைகள் என்பவை, அரசு கொள்கைகளில் தனது முத்திரையைப் பதிக்க விரும்பும் எந்த ஒரு அமெரிக்க அதிபருக்கும் கிடைக்கும் ஒரு முக்கிய கருவியாகும்.

ஒபாமா, நிர்வாக ஆணை அதிகாரத்தைப் பயன்படுத்தி, சுகாதாரம், ஒருபாலுறவினர் உரிமைகள் போன்ற விஷயங்களில் உத்தரவுகளைப் பிறப்பித்தபோது, அவர் தன் அதிகார வரம்பை மீறுகிறார் என்று குற்றம் சுமத்திய குடியரசுக் கட்சியினர், இப்போது ஒபாமாகேர் என்ற அந்த சுகாதாரத் திட்டத்தை விலக்கிக்கொள்ள , டொனால்ட் டிரம்ப் அதே யுக்தியைப் பயன்படுத்திய போது பாராட்டியிருக்கிறார்கள்.

'முஸ்லீம் பயணத்தடை': நிலைப்பாட்டை மாற்ற மறுக்கும் டிரம்ப்

அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனு ஒன்றில் மில்லியனுக்கும் அதிகமானோர் கையெழுத்து

டிரம்பின் பயணத்தடை முடிவுக்கு அமெரிக்க முழுக்க தொடரும் போராட்டங்கள்

நிர்வாக ஆணை என்பது , அதிபர் , மத்திய அரசுக்குப் பிறப்பிக்கும் எழுத்துபூர்வமான உத்தரவு; இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படாது.

இந்த ஆணைகள், கடும் சர்ச்சைக்குள்ளான இரண்டு எண்ணெய்க் குழாய்ப் பாதைக் கட்டுமான திட்டங்களுக்கு டிரம்ப் ஒப்புதல் வழங்கியதைப் போன்ற , கொள்கை முடிவுகளை பரபரப்பான வகையில் விலக்கிகொள்வது முதல், 2015ம் ஆண்டு, கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை தர, ஒபாமா உத்தரவு தெரிவித்தது போன்ற சாதாரணமான நிர்வாக விஷயங்கள் வரை, பயன்படுத்தப்படலாம்.

இந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் அமெரிக்க அரசியல் சட்டத்தின் இரண்டாவது ஷரத்திலிருந்து பெறப்படுகிறது. '' நிர்வாக அதிகாரம் அமெரிக்க அதிபரிடம் இருக்கும்'' , என்று இந்த ஷரத்து கூறுகிறது.

அதிபர்கள் ஏன் நிர்வாக ஆணைகளை பிறப்பிக்கிறார்கள்?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரூஸ்வெல்ட் பல ஆயிரம் ஆணைகளை அளித்துள்ளார்.

சில நேரங்களில் போர்க்காலங்களின் போதோ அல்லது உள்நாட்டு நெருக்கடியைத் தவிர்க்கவோ , நிர்வாக ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட் சுமார் 1.20 லட்சம் ஜப்பானிய அமெரிக்கர்களைத் தடுத்து வைக்கும் மையங்களை உருவாக்க வித்திட்ட நிர்வாக ஆணையை, 1942ம் ஆண்டு பிப்ரவரியில் பிறப்பித்தார்.

அதே போல, 1952ல் , அதிபர் ஹாரி எஸ்.ட்ரூமன் ஒரு வேலை நிறுத்தத்தைத் தவிர்க்கும் நோக்கில், எஃகுத் தொழில்துறையை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரும் உத்தரவைப் பிறப்பித்தார்.

மிக பிடிவாதமாக இருந்த, குடியரசுக் கட்சியினர் உருவாக்கிய சிக்கலான முட்டுக்கட்டை நிலையை சமாளிக்க ஒபாமா அவரது நிர்வாக ஆணைகளிலேயே மிக சர்ச்சைக்குரிய நிர்வாக ஆணையைப் பிறப்பித்தார்.

''அவர்கள் எதையும் செய்யப் போவதில்லையெனும்போது நாங்கள் எங்களால் முடிந்தவற்றை செய்வோம்'' என்று அவர் கன்சாஸ் சிட்டியில் 2014ம் ஆண்டு ஜூலையில் கூறினார். '' உங்கள் நாடாளுமன்றம் செயல்படாதபோது, நாங்கள் செயல்படுவோம்'', என்றார் ஒபாமா.

நிர்வாக ஆணைகள் ஏன் அரசியல் ரீதியாக பிரச்சனைக்குரியவை?

படத்தின் காப்புரிமை AP
Image caption சபாநாயகர் ஜான்போஹெனர் தலைமையில் குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் ஒபாமாவின் நிர்வாக ஆணைகளுக்கு எதிராக பேசிய தருணம்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிபரை செயல்பட அனுமதிக்கின்றன என்பதால் , நிர்வாக ஆணைகள் சர்ச்சைக்குரியவையாகின்றன.

ஒபாமா 2010ல் கொண்டுவந்த சுகாதார திட்டங்கள் தொடர்பான மாற்றங்களின் ஒரு பகுதியை எதிர்த்து வெற்றிகரமாக குடியரசு கட்சியினர் வழக்கு தொடர்ந்தனர். ஒபாமா தனது அரசியலமைப்பு அதிகாரத்தை மீறிவிட்டார் என்றும் காப்பீடு தொடர்பாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு காலக்கெடுவை தாண்டி தாமதம் செய்தார் என்பது அவர்களின் வாதம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக மெதுவாக செயல்படும் போது அல்லது அதிபர் ஒரு புதிய சட்டத்தின் சாராம்சத்தை எடுக்கவேண்டும் என்று அதிபர் எண்ணினாலோ நிர்வாக ஆணையை பிறப்பிக்கலாம்.

நிர்வாக ஆணைகள் எவ்வளவு அடிக்கடி பிறப்பிக்கப்படுகின்றன?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குரோவர் கிளீவ்லேண்ட் தனது முதல் பதவிக்காலத்தின் போது ஆண்டொன்றுக்கு28 நிர்வாக ஆணைகளை பிறப்பித்தார்.

ரூஸ்வெல்ட் பதவியில் இருந்த 12 வருடங்களில் 3,721 ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. ஒபாமா வெறும் 279 ஆணைகளை தான் பிறப்பித்தார். ஜார்ஜ் .டபள்யு.புஷ் தனது எட்டு ஆண்டு கால ஆட்சியில் 291 ஆணைகளை பிறப்பித்தார்.

நவீன கால அளவுகோல்கள்படி ஒப்பீட்டு அளவில், ஒபாமாதான் குறைந்த எண்ணிக்கையில் நிர்வாக ஆணைகளை பிறப்பித்தார் .

இது நாள் வரை இருந்த அதிபர்களில், மிக குறைந்த நிர்வாக ஆணைகளை பிறப்பித்தவராக கருதப்படும் அதிபர் குரோவர் கிளீவ்லேண்ட், 1885-89 வரை மற்றும் 1893-97 வரை தனது ஆட்சியில் ஒரு ஆண்டிற்கு சுமார் 32 ஆணைகளை பிறப்பித்தார். அதோடு ஒப்பிட்டால், ஒபாமா ஒரு ஆண்டில் சுமார் 35 ஆணைகளை ஒபாமா பிறப்பித்துள்ளார்.