வங்கிகளில் இருந்து பணம் எடுக்கும் கட்டுப்பாட்டில் தளர்வு

நடப்பு, காசு கடன் மற்றும் மிகைப்பற்று வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு இருந்த வரையறையை நீக்கியுள்ளதோடு, இது உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஏடிஎம் பணம் வழங்கும் எந்திரங்கள் மூலம் பணம் எடுப்பதற்கு இருக்கும் கட்டுப்பாடுகள் பிப்ரவரி முதல் நாள் புதன்கிழமை நீக்கப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது,

சேமிப்பு வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு இருக்கும் கட்டுப்பாடுகள் இப்போது போலவே தொடரும் என்றும், எதிர்காலத்தில் அதனையும் அகற்றிவிடுவது ஆராயப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதன்படி, புதன்கிழமை முதல் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து ஒருமுறை 10 ஆயிரம் ரூபாய் தான் எடுக்க முடியும் என்றில்லை. ஒரே முறையில் 24 ஆயிரம் ரூபாயை எடுத்துவிடலாம்.

படத்தின் காப்புரிமை Google

சேமிப்பு வங்கி கணக்குகளில் இருந்து எடுக்கின்ற பணக்கட்டுப்பாடு நீக்கப்படாததால், ஒரு வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக எடுக்க முடியாது.

நடப்பு, காசு கடன் மற்றும் மிகைப்பற்று வங்கிக் கணக்குகளுக்கு வங்கியில் சென்று பணம் எடுக்கும்போதும், ஏடிஎம் பணம் வழங்கும் எந்திரங்களில் பணம் எடுக்கும்போதும் கட்டுப்பாடுகள் இல்லாமல் எடுத்துகொள்ளலாம்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் இரவு இந்திய பிரதமர் நரேந்திர மோதி திடீரென அறிவித்தார். அதனால் இந்தியா முழுவதும் பண நெருக்கடி ஏற்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

செலவுக்கு போதிய பணமில்லாமல் பொதுமக்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம் பணம் வழங்கும் எந்திரங்கள் முன்பாக குவிந்ததால் நீண்டவரிசைகளில் காத்திருந்து அல்லலுற்றனர்.

அதன் பிறகு படிப்படியாக ஒரு வாரத்திற்கு மக்கள் எடுக்கக்கூடிய தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்