பிலிப்பைன்ஸில் சர்ச்சைக்குரிய போதை மருந்து எதிர்ப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

பிலிப்பைன்ஸில் ஊழல் மிகுந்த போலீஸ் படையை சுத்தப்படுத்தும் வரை போதை மருந்துக்கு எதிரான சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை அந்நாட்டு போலீஸார் இடைநிறுத்துகின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஊழல் மிகுந்த போலீஸ் படையை சுத்தப்படுத்தும் வரை போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கைகள் இடைநிறுத்தம் : ரொனால்ட் டிலா ரோஸா

போதை மருந்து எதிர்ப்பு நடவடிக்கைக் குழுக்கள் கலைக்கப்படும் என்று திங்களன்று போலீஸ் தலைவர் ரொனால்ட் டிலா ரோஸா கருத்து தெரிவித்திருந்தார்.

போலீஸ் தலைமையகத்திற்குள் தென் கொரிய தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அவர் போதை எதிர்ப்பு போலீஸாரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

போதை மருந்து மீதான கடும் நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து சுமார் 7,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பலியானவர்களின் எண்ணிக்கை மற்றும் போதை மருந்துக்கு எதிரான அதிபர் ரோட்ரிகோ டுடெர்தே கடுமையான நிலைப்பாடு ஆகியன மனித உரிமைகள் குழுவின் கடும் விமர்சனங்கள் மற்றும் மேற்கு நாடுகளின் கடும் விமர்சனங்களுக்கு ஈர்த்தது.

எனினும், பிலிப்பைன்ஸ் குடிமக்கள் அதிபருக்கு தங்களுடைய பேராதரவை வழங்கி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்