அவகாசம் கொடுத்திருந்தால் கெட்ட மனிதர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்திருப்பார்கள் : டிரம்ப்

ஏழு முஸ்லிம் நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்கா வருவதற்கும், அமெரிக்காவின் அகதிகள் திட்டத்திற்கும் தடை விதித்து தான் பிறப்பித்த உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் நியாயப்படுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER

இந்த தடை உத்தரவு குறித்து ஒருவார கால அவகாசம் கொடுத்திருந்தால் கெட்ட மனிதர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்திருப்பார்கள் என்று தன்னுடைய ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வார இறுதியில் அமெரிக்க விமான நிலையங்களில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு இந்த தடையை குற்றம் சொல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

டெல்டா ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனத்தில் ஏற்பட்ட கணினிக் கோளாறு மற்றும் போராட்டக்காரர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றால் இடையூறு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்