டிரம்பின் செயலாணையை ஐநா செயலாளர் விமர்சித்தாரா?

உலகிலேயே மிக பெரிய அளவில், அதிக தாராளமாக அகதிகளை வரவேற்கும் நாடுகளில் ஆப்ரிக்க நாடுகள் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோண்யோ கூடெர்ரெஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சில வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களுடைய நாடுகளின் எல்லைகளை மூடுகின்ற வேளையில், ஆப்ரிக்கா கண்டம் எல்லைகளை திறந்து வைத்துள்ளதாக எத்தியோப்பாவில் நடைபெற்ற ஆப்ரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் பேசியபோது கூடெர்ரெஸ் தெரிவித்துள்ளார்.

கூடெர்ரெஸின் இந்த கூற்றுக்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , பெரும்பாலும் முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட 7 நாடுகளிலிலிருந்து மக்கள் குடியேற்றத்திற்கு தடை விதித்துள்ள செயலாணைக்கு மறைமுகமான விமர்சனம் என்று செய்தியாளர்களால் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்