அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுமா?

உலக வெப்பமடைவதைக் குறைக்கும் நோக்கிலான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா நீங்கிவிடும் என்று தான் எதிர்பார்ப்பதாக அதிபர் டிரம்பின் பருவகால மாற்றத்திற்கான ஆலோசகர் மைரோன் இபெல் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பருவகால மாற்றம் என்பது ஏமாற்று வேலை என்று டிரம்ப் முன்னதாக அதனை நிராகரித்திருக்கிறார்.

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து நீங்குவது, ஐக்கிய நாடுகள் அவையின் பருவகால மாற்றம் தொடர்பான திட்டங்களுக்கு நிதி ஆதரவை நிறுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்துவதில் அதிபர் டிரம்ப் உறுதியாக இருக்கிறார் என தான் நம்புவதாக மைரோன் இபெல் கூறியிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்