லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் பிரேசிலின் பணக்கார தொழிலதிபர் போலீஸில் சரண்

பிரேசில் நாட்டின் பணக்காரர்களில் ஒருவரான ஈக் படிஸ்டா லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள போலீசாரிடம் சரணடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை FREDERIC J. BROWN
Image caption ஈக் படிஸ்டா ஒரு எண்ணெய் மற்றும் சுரங்க தொழிலதிபர்.

நியு யார்க்கிலிருந்து பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்கு வந்த விமானத்திலிருந்து அந்த தொழிலதிபர் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டதை தொலைக்காட்சி காணொளிகள் காட்டுகின்றன.

ஈக் படிஸ்டா ஒரு எண்ணெய் மற்றும் சுரங்க தொழிலதிபர்.

ஒருமுறை உலகின் செல்வந்தர்கள் குறித்த பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட போது அதில் ஈக் படிஸ்டா ஏழாவது இடத்தை பெற்றிருந்தார்.

ரியோ டி ஜெனிரோ மாநில அரசு அதிகாரிகளுக்கு அவர் லஞ்சம் வழங்கி வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்