அவுஸ்விட்ச் மரண முகாமிலிருந்த நாஜிக்களின் பெயர்கள் வெளியீடு

ஜெர்மனி ஆக்கிரமித்திருந்த போலந்தில் அவுஸ்விட்ச் மரண முகாமிலிருந்த நாஜி தளபதிகள் மற்றும் பாதுகாவலர்களின் மிகவும் விரிவான பட்டியலை போலாந்தின் தேசிய நினைவு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Scott Barbour
Image caption அவுஸ்விட்ச் மரண முகாமிலிருந்த நாஜிக்களின் பெயர்கள் வெளியீடு

அவுஸ்விட்ச் ராணுவ முகாம் பட்டியலில் சுமார் 9,000 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில், சிலவற்றில் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அவுஸ்விட்ச் ஒரு போலாந்தின் முகாம் என்ற பொய்யை எதிர்த்து இந்த பட்டியல் போராடும் என்று நிறுவனத்தின் தலைவர் யரோஸ்வாஃப் ஸரேக் கருத்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்விட்ச்சில் நாஜிக்களால் சுமார் ஒரு மில்லியனுக்குக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

அதில் பெரும்பான்மையானவர்கள் யூதர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்