ரொஹிஞ்சா முஸ்லீம்கள் மீதான மனித உரிமை மீறல்: விசாரணை அறிக்கையை மியான்மர் அரசு ஒத்திவைப்பு

மியான்மரின் ரக்கீன் மாநிலத்தில் சிறுபான்மை ரொஹிஞ்சா முஸ்லீம் பிரிவினருக்கு எதிராக நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை அறிக்கை வெளியீடை மியான்மர் அரசு ஒத்தி வைத்துள்ளது.

மியான்மாரை விட்டு வெளியேறும் ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Image caption ரொஹிஞ்சா முஸ்லீம்கள் மீதான மனித உரிமை மீறல்: விசாரணை அறிக்கை வெளியீடு ஒத்திவைப்பு

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வந்துள்ள புதிய கூற்றுக்கள் குறித்து ஆராய விசாரணை ஆணையத்துக்கு மேலும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் அதிபர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Image caption வங்கதேசத்தில் ஏராளமான ரொஹிஞ்சா முஸ்லீம்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்

ஆனால், இந்த விசாரணை அறிக்கையை திருத்தி மாற்றியமைக்க மியான்மரின் நடைமுறையின் தலைவர் ஆங் சான் சூ சி விசாரணை ஆணையத்திடம் கூறியிருக்கலாம் என அந்நாட்டில் உள்ள ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ரொஹிஞ்சா முஸ்லீம்களை பாலியல் வல்லுறவு மற்றும் கொலை செய்ததான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் படையினர் அக்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அகதிகளாக பல இடங்களில் வாழ்ந்து வரும் ரொஹிஞ்சா முஸ்லீம்கள்

ஒரு முன்னாள் ராணுவ தளபதியின் தலைமையில் செயல்படும் இந்த விசாரணை ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்