பாகிஸ்தான்: வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஹஃபீஸ் சயீத்தின் ஆதரவாளர்கள் போராட்டம்

கடந்த 2008-ஆம் ஆண்டில் இந்தியாவின் மும்பையில் நடந்த தாக்குதல்களை திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் என்று குற்றம்சாட்டப்பட்ட ஹஃபீஸ் சயீத் கைது செய்யப்பட்டு பாகிஸ்தானின் லாகூரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தானின் பல நகரங்களிலும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption லாகூரில் வீட்டுக் காவலில் ஹஃபீஸ் சயீத் வைக்கப்பட்டுள்ள பகுதி

ஹஃபீஸ் சயீத் தலைமை வகிக்கும் ஜமாத் உத் தாவா அமைப்பு, தன்னை ஒரு தொண்டு நிறுவனம் என்று விவரித்துக் கொண்டாலும், லக்ஷ்கர் - இ - தொய்பா தீவிரவாத குழுவுக்கு அரசியல் முன்களமாக ஜமாத் உத் தாவா செயல்படுவதாக பரவலாக பார்க்கப்படுகிறது.

166 பேர் இறந்த மும்பை முற்றுகைத் தாக்குதலின் பின்னணியில் லக்ஷ்கர் - இ - தொய்பா குழு உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 'என்னை வீட்டுக் காவலில் வைத்ததற்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அழுத்தமே காரணம்'

தன்னை வீட்டுக் காவலில் வைத்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தந்த அழுத்தத்தின் காரணமாக நிகழ்ந்துள்ளது என்று ஹஃபீஸ் சயீத் நேற்று (திங்கள்கிழமை) மாலையில் தெரிவித்தார்.

ஹஃபீஸ் சயீத்தை பிடிப்பதற்கு 10 மில்லியன் டாலர்கள் வெகுமதியை வழங்கப் போவதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆனால், மும்பை தாக்குதலில் தனக்கு எந்த பங்கும் இல்லையென ஹஃபீஸ் சயீத் மறுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்