இஸ்லாமிய முகத்திரையைத் தடை செய்ய ஆஸ்திரியா திட்டம்

ஆஸ்திரியா நாட்டின் ஆளும் கூட்டணி அரசு நீதிமன்றங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் திரை அணிவதை தடை செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆஸ்திரியா: பொது இடங்களில் முகத்தை மறைக்கும் திரை அணிவதை தடை செய்ய அரசு திட்டம்

தலையை மறைக்கும் துணி மற்றும் மற்ற மத அடையாளங்களை அரசு ஊழியர்கள் அணிந்து வருவதை தடை செய்வது குறித்தும் அரசு பரிசீ்லித்து வருகிறது.

ஆஸ்திரியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தீவிர வலதுசாரி சுதந்திரக் கட்சியின் வளர்ச்சியை தடுக்கும் முயற்சிகளாக அரசின் இந்த நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன.

கடந்த மாதத்தில் ஆஸ்திரியாவில் நடந்த ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் இக்கட்சியின் வேட்பாளர் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தார்.

முன்னதாக, கடந்த வாரத்தில் அரசின் எதிர்கால நோக்கு குறித்த அவசர பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ஆஸ்திரியாவின் ஆளும் மத்திய சித்தாந்தக் கூட்டணி ஏறக்குறைய கவிழும் நிலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

பல சீர்திருத்தங்கள் அடங்கிய தொகுப்பினை அறிவித்த ஆளும் கூட்டணி, கண்களை மட்டுமே வெளிக்காட்டும் நிகாப், மற்றும் முகம் முழுவதையும் மூடிவிடும் புர்கா போன்ற இஸ்லாமியரின் ஆடைகளை தடை செய்ய உத்தேசித்துள்ள திட்டம் குறித்து இரண்டு வரிகளில் மட்டுமே குறிப்பிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்