உக்ரேனின் கிழக்கு பகுதியில் மனிதநேய நெருக்கடி

மோதல்கள் அதிகரித்துள்ள உக்ரேனின் கிழக்கு பகுதியிலுள்ள தொழில்துறை நகரமான அவ்டியிவ்கா நகரில் மனிதநேய நெருக்கடி நிலவி வருவதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

இதனால், உறையும் குளிர்கால நிலைமையில், ஆயிரக்கணக்கானோர் குடிநீரும், மின்சாரமும் இல்லாமல் தவிக்கவிடப்பட்டுள்ளனர்.

சாத்தியக்கூறான மக்கள் வெளியேற்றத்திற்காக போர்நிறுத்தம் ஒன்று ஒப்புகொள்ளப்பட்டாலும், ஷெல் குண்டு தாக்குதல் தொடர்வதாக இந்த நகரத்திற்கு அருகிலுள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்த கலவரத்திற்கு ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளே காரணம் என்று உக்ரேன் குற்றஞ்சாட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றிபெற்றிருப்பதும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அவர் புகழ்வதும், மோதலை அதிகரிக்க செய்திருப்பதாக உக்ரேன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ கவலை வெளியிட்டுள்ளார்.

மின்ஸ்க் அமைதி ஒப்பந்தத்தை குலைக்கும் வகையில் உக்ரேன் ஆதரவு தீவிரவாதிகள் போரை தொடங்கியுள்ளதாக புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்டிரி பஸ்கோஃப் கூறியுள்ளார்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் கிளர்ச்சியை தொடங்கிய பிறகு, 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்