ஏழரை மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிப்பு - யுனிசெப்

உலக அளவில் ஏழரை மில்லியன் குழந்தைகளுக்கு மேலானோர் இந்த ஆண்டு ஊட்டச்சத்து இல்லாமல் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகளுக்கான நிறுவனமான யுனிசெப் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மோதல்களும், சிரியா, நைஜீரியா மற்றும் ஏமன் உள்பட பிற மனிதநேய நெருக்கடிகள் நடைபெறும் இடங்களிலுமுள்ள 48 மில்லியன் குழந்தைகளுக்கு உதவ 3.3 பில்லியன் டாலர் தேவைப்படுவதாக இந்த நிறுவனம் கோரியுள்ளது.

சுத்தமான குடிநீர் மற்றும் தட்டம்மை தடுப்பூசி, அடிப்படை பராமரிப்பு மற்றும் கல்விக்காகவும் இந்த நிதிகள் பயன்படுத்தப்படும்.

ஏழாம் ஆண்டாக போர் நடைபெற்று வருகின்ற சிரியாவில், இந்த நிதியில் மூன்றில் ஒரு பங்கு பயன்படுத்தப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்