மேற்கு கரை பகுதியில் குடியேறிகளை வெளியேற்றும் முயற்சியில் வன்முறை

மேற்கு கரையில் சட்ட விரோதக் குடியி்ருப்பான, அமோனாவில் குடியேறிகளை வெளியேற்ற முயற்சித்த இஸ்ரேல் போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளன.

பல அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீண்ட நெடுங்கால சட்ட போருக்கு பிறகு இந்த கட்டாய வெளியேற்றம் நடைபெறுகிறது; அமோனா, பாலத்தீன தனியார் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதால் அது இடிக்கப்பட வேண்டும் என 2014 ஆம் ஆண்டு இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சமீப வாரங்களில் டஜன் கணக்கான குடியேறி ஆதரவு ஆர்வலர்கள், குடியிருப்புவாசிகளுக்கு ஆதரவு தெரிவிக்க அங்கு வருகை புரிந்துள்ளனர்; அவர்கள் அந்த வெளியேற்றத்தை அமைதியான முறையில் தடுக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று மேற்கு கரையில் உள்ள யூத குடியேறிகளுக்கு கூடுதலாக 3000 புதிய வீடுகளை கட்டி தரும் திட்டத்தை இஸ்ரேல் அறிவித்தது.

ஆக்கிரமிப்பு நிலத்தில் அம்மாதிரியான கட்டுமான வேலைகள் , எதிர்காலத்தில் பாலத்தீன அரசை உருவாக்கும் நம்பிக்கையை குலைக்கின்றன என சர்வதேச நிறுவனங்கள் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்