தான் பரிந்துரை செய்த நீதிபதியின் நியமனத்துக்கு விரைவாக ஒப்புதல் வழங்குமாறு டிரம்ப் வலியுறுத்தல்

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள இடத்தில் தன்னால் பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதி நீல் கோர்சஷ்சின் நியமனத்துக்கு விரைவாக ஒப்புதல் வழங்குமாறு அமெரிக்க செனட் அவையை அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நீல் கோர்சஷ்சின் நியமனத்துக்கு விரைவாக ஒப்புதல் வழங்குமாறு டிரம்ப் வலியுறுத்தல்

தன்னால் பரிந்துரை செய்யப்பட்ட நபருக்கு மிகச் சிறந்த சட்ட திறன்கள் உள்ளதால், அவருக்கு அவையின் இரு முக்கிய கட்சிகளின் ஆதரவும் கிடைக்கக்கூடிய தகுதி உள்ளதென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பழமைவாத நீதிபதியான நீல் கோர்சஷ்சின் நியமன பரிந்துரை மிகவும் ஈர்க்கக்கூடியது என குடியரசுக் கட்சியினர் தெரிவித்துள்ள வேளையில், பெண்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து கோர்சஷ்சின் அணுகுமுறை குறித்து ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினர்களுக்கு புதிய நீதிபதியின் நியமனத்தை தாமதப்படுத்த அல்லது தடை செய்ய அதிகாரமுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா பரிந்துரை செய்த ஒரு நியமனத்தை குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பரிசீலிக்கக்கூட மறுத்ததால் உச்ச நீதிமன்றத்தில் இந்த இடம் ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்