அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை செயலராக பொறுப்பேற்றார் ரெக்ஸ் டில்லர்சன்

எக்ஸான் மொபில் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான ரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை செயலராகபதவியேற்று கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை செயலராக பொறுப்பேற்றார் ரெக்ஸ் டில்லர்சன்

டெக்சாஸ் மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்ட அவருக்கு 64 வயது ஆகிறது.

செனட் சபையில் வாக்கெடுப்பில் 56-43 என்ற வாக்குகளை பெற்று அதன் ஒப்புதலை பெற்றார் ரெக்ஸ் டில்லர்சன்.

சுகாதாரம் மற்றும் கருவூல துறைகளுக்கு அதிபர் டிரம்பின் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க செனட் சபையில் உள்ள குடியரசுக் கட்சியினர் விதிகளை மாற்றி அமைத்ததைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுவரை அரசியலில் எவ்வித பொறுப்புகளையும் வகிக்காத டில்லர்சன் ரஷ்யா உடனான உறவுகள் குறித்து செனட் உறுப்பினர்களால் கடுமையான மீளாய்வுகளை எதிர்கொண்டார்.

அதிபரின் ஓவல் அலுவலகத்தில் புதிய வெளியுறவுத்துறை செயலராக பொறுப்பேற்று கொண்ட டில்லர்சனிடம், இந்த தருணத்திற்காக தான் உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் உங்களை தயார்படுத்தியுள்ளது என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்