கணினி குறியீடு திருட்டு : ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 500 மில்லியன் டாலர்கள் அபராதம்

சட்டத்திற்கு புறம்பாக வேறொரு நிறுவனத்தின் வி ஆர் எனப்படும் மெய் நிகர் தொழில்நுட்பத்தை பிரபல ஃபேஸ்புக் நிறுவனம்பயன்படுத்தியகுற்றச்சாட்டில் சுமார் 500 மில்லியன் டாலர்கள் இழப்பீடு தர அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், மேல்முறையீடு செய்யப்போவதாகவும் ஆக்குலஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் வாங்கிய ஆக்குலஸ் என்ற நிறுவனம், ஸெனிமேக்ஸ் என்ற வீடியோ கேம் தயாரிக்கும் நிறுவனம் தங்களுடைய சொந்த மெய் நிகர் ஹெட்செட்களை வெளியிடுவதற்கு வைத்திருந்த கணினி குறியீடுகளை பயன்படுத்தியுள்ளதை நடுவர் குழு (ஜூரி) கண்டறிந்துள்ளனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், மேல்முறையீடு செய்யப்போவதாகவும் ஆக்குலஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கானது ஃபேஸ்புக் நிறுவனத்தின் சமீபத்திய வரவு செலவு முடிவுகளின் முக்கியத்துவத்தை குறைத்தது.

அதில், அந்நிறுவனத்தின் சமூக வலைத்தள நிறுவனம் ஈட்டிய லாபம் சுமார் 177 சதவிதமாக காணப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்