'48,000 டாலர்கள் வரை அதிகாரிகள் ஊழல் செய்யலாம்' : சட்ட ஆணையை எதிர்த்து ருமேனியாவில் ஆர்ப்பாட்டம்

சில ஊழல் நடவடிக்கைகள் மீதான குற்றமற்றவையாக்கும் அரசின் ஆணை ஒன்றை எதிர்த்து ருமேனியாவில் மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

1989 ஆம் ஆண்டு கம்யூனிஸ ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு நடைபெறும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும்.

தலைநகர் பூகாரெஸ்ட்டில் சுமார் இரண்டரை லட்சம் பேர் பேரணியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். டஜன்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனியாவின் சர்வதேச அளவிலான நற்பெயர் மற்றும் அதற்கு ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ கூட்டணி நாடுகளுடன் உள்ள உறவுகள் அபாயத்தில் இருப்பதாக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க உள்பட ஆறு நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல் நடவடிக்கைகள் 48 ஆயிரம் டாலருக்கு கீழ் சேதம் ஏற்படுத்தும் பட்சத்தில் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படமாட்டார்கள் என்கிறது இந்த புதிய ஆணை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்