தென் கொரியா வந்தடைந்தார் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத்துறை செயலர்

அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத்துறை செயலரான ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ், கிழக்கு ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் நட்புறவு நாடுகளுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் தொடக்கமாக தென் கொரியாவிற்கு வந்தடைந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தலைநகர் சோலில் உள்ள விமான தளத்தில் தரையிறங்கினார் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத்துறை செயலர்

அதிபர் டிரம்பின் அமைச்சரவையிலிருந்து உறுப்பினர் ஒருவர் வெளிநாடு ஒன்றுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

தென் கொரியாவில் அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்புமுறை ஒன்றை நிர்மாணிப்பது குறித்தும், வட கொரியாவின் அணுஆயுத திட்டம் குறித்த பதற்றங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

'தாட்' எனப்படும் டெர்மினல் அதி உயர பகுதி பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, பிராந்திய பாதுகாப்பு இருப்புக்கு இது ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

தென் கொரியா மற்றும் ஜப்பானிடம் அமெரிக்கா வழங்கும் பாதுகாப்பிற்கு அதிகமாக பணம் செலுத்த வேண்டும் என்பதை தான் கேட்பேன் என்று அதிபர் பிரச்சாரத்தின் போது டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்