பாரிஸின் லூவ்ர் அருங்காட்சியகத்தில் படையினரைத் தாக்கியவர் மீது துப்பாக்கி சூடு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற லூவ்ர் அருங்காட்சியகத்தில், படையினர் குழு ஒன்றின் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய ஒருவரை, பிரெஞ்சு சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பலத்த காயப்படுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

படையினரில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தாக்குதல்தாரி மீது ஐந்து துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டதாகவும், அவர் அரபு மொழியில் `இறைவன் பெரியவர்` என்று கூக்குரலிட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

தாக்குதல்தாரி வயிற்றில் சுடப்பட்டார். ஆனால் அவரை அவசர சேவைப் பிரிவினர் எடுத்துச்செல்கையில் நினைவுடன் இருந்தார்.

அவர் முதுகில் சுமந்திருந்த இரண்டு பைகளில் வெடிபொருட்கள் ஏதும் இல்லை.

இந்தப் படையினர், பிரான்சில் நையாண்டி சஞ்சிகையான, சார்லி எப்தோ மற்றும் 2015ல் ஒரு யூத பல்பொருள் அங்காடி மீது தீவிரவாத இஸ்லாமியவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து பிரான்ஸ் முழுவதும் அமலில் இருக்கும் `ஆப்பரேஷன் செண்டினெல்` என்ற ராணுவ நடவடிக்கையில் அங்கம் வகிப்பவர்களாவர்.

பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் இந்த சம்பவத்தை மிகவும் அபாயமானது என்று கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்