குட்டி இளவரசரின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் பூட்டான் குடிமக்கள் (புகைப்படத் தொகுப்பு)

பூட்டானின் குட்டி இளவரசரின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வெளியிடப்பட்ட புகைப்படங்களால் ரசிகர்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Yellow

பாரம்பரிய அரசு குடும்பத்தின் மஞ்சள் நிற அங்கியை அணிந்தபடி, மிகவும் கவர்ச்சிகரமான புன்னகையை உதிர்க்கும் பூட்டானின் குட்டி டிராகன் இளவரசர் தனக்கு பிடித்தமான கார் பொம்மையுடன் போஸ் கொடுக்கிறார். பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று அவருக்கு ஒரு வயது ஆகிறது.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த குட்டி இமாலய ராஜ்ஜியமானது பூமியிலே மகிழ்ச்சியான இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பூட்டனில் மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு அரசு வம்சத்தில் குழந்தை பிறப்பை கொண்டாடும் வகையில் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் மரங்கள் நடப்பட்டன.

படத்தின் காப்புரிமை Yellow

ஊடகங்களுக்கான பூட்டானின் ராயல் அலுவலகம் தேர்ந்தெடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள , யெல்லோ இணைய தளம், இந்த பிரத்யேக காலண்டர் புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்வது இலவசம் என்றும், இது பலருடைய இதயங்களை உருக வைக்கும் என்றும் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Facebook: Jetsun Pema

''எல்லா குழந்தைகளும் அழகுதான் ஆனால் பூட்டானின் குட்டி இளவரசர் என்னுடைய இதயத்தை திருடிவிட்டார்'' என்று ஃபேஸ்புக்கில் ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Facebook: Jetsun Pema

அரசர் ஜிக்மே கெசார் நம்கெய்ல் வாங்சக் பூட்டானை ஆட்சி செய்து வருகிறார். உலகிலே இளைய அரசர்களில் அவரும் ஒருவர்.

படத்தின் காப்புரிமை Facebook: Jetsun Pema

அரச குடும்பத்தின் வாழ்க்கை குறித்த அரிய துளிகள் என்று முன்பு கருதப்பட்ட விஷயங்களை தற்போது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் கணக்குகள் பூட்டான் குடிமக்களுக்கு வழக்கமாக வழங்கி வருகின்றன.

படத்தின் காப்புரிமை Facebook: King Jigme Khesar Namgyel Wangchuck

குட்டி இளவரசரின் வளர்ச்சியை பார்ப்பதற்கு தாங்கள் பெருமை கொள்வதாக அரசு மாளிகையில் உள்ள பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்