அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை பற்றி கவலையில்லை : இரான் பதிலடி

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை பற்றி கவலையில்லை என்றும், ஆனால் தான் ஒரு போரை முதலில் தொடங்கப்போவதில்லை என்றும் இரான் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் இரான் நாட்டிடம் எவ்வளவு அன்பாக இருந்தது என்பதை அவர்கள் உணரவில்லை : ஜாவாத் ஸரீஃப்

அதிபர் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவாத் ஸரீஃப் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நெருப்புடன் இரானியர்கள் விளையாடி கொண்டிருக்கிறார்கள் என்று முன்னர் டிரம்ப் கூறியிருந்தார்.

அதற்கு பதில் கூறியுள்ள ஜாவாத், அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் இரான் நாட்டிடம் எவ்வளவு அன்பாக இருந்தது என்பதை அவர்கள் உணரவில்லை என்று கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் இரானின் நடத்தையை மாற்றுகின்ற புதிய உத்தியை செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்று சௌதி அரேபிய ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்