ராணுவ பயிற்சியில் குறுகிய தூர ஏவுகணை, ரேடார் அமைப்புகளை பரிசோதிக்க இரான் திட்டம்

இரான் தன்னுடைய ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த பயிற்சியின் போது அது தன்னுடைய குறுகிய தூர ஏவுகணை மற்றும் ரேடார் அமைப்புகளை பரிசோதிக்க உள்ளது.

படத்தின் காப்புரிமை MEHDI MARIZAD
Image caption கோப்புப்படம்

இரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்ததை தொடர்ந்து அதற்கு அடுத்தநாள் அங்கு இந்த ராணுவ பயிற்சிகள் நடைபெறுகின்றன.

தவறான நடவடிக்கையை எடுக்கும் நாட்டின் எதிரிகள் மீது தங்களால் ஏவுகணையை மழைப்போல பொழிய முடியும் என்று இரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிறன்று இரான் நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை திட்டத்திற்கு பதிலடியாக புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும், தீவிரவாதத்திற்கு தொடர்ந்து இரான் ஆதரவு வழங்கி வருகிறது என்றும் அமெரிக்கா வர்ணித்துள்ளது.

அமெரிக்க தடை ஐநா ஆதரவு பெற்ற ஒப்பந்தத்துக்கு எதிரானது - இரான் கண்டனம்

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை பற்றி கவலையில்லை : இரான் பதிலடி

மத்திய கிழக்கு நாடுகளில் இரானின் ஈடுபாடு மாறுமா?

இரான் வாங்கிய முதல் ஏர்பஸ் விமானம் தெஹரானில் பத்திரமாக தரையிறங்கியது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்