ரொமேனியா அரசியல்வாதிகளை ஊழலில் இருந்து காக்கும் ஆணையை ரத்து செய்ய அவசரக் கூட்டம்

ஊழல் வழக்கிலிருந்து டஜன் கணக்கான அரசியல்வாதிகளை பாதுகாக்கும் ஆணையை ரத்து செய்வதற்காக ரொமேனியா அரசின் அவசரக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption சுமார் ஒரு வாரமாக ரோமானியாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நாட்டில் கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கு பிறகு, அந்த ஆணை மிகப் பெரிய அளவில் மக்கள் போராட்டத்தை தூண்டியது.

பல்லாயிரக்கணக்கானவர்களின் பல நாள் போராட்டங்களுக்கு பிறகு பிரதமர் சோரின் கிரிண்டியானு, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.

மத்திய பூக்கரஸ்டில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொடி அசைத்தவாறு மகிழ்ச்சி ஆரவாரங்களை எழுப்பி பிரதமரின் அறிவிப்பை வரவேற்றனர்.

ஆனால் ஆணை ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.