அதிபருக்கு எதிராக பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க திருச்சபை போர்க்கொடி

பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டெவின் போதை மருந்துக்கு எதிரா நடவடிக்கை, நாட்டின் ஏழை மக்களை தீவிர அச்சத்திற்குள்ளாக்கும் ஆட்சி முறை என்று அந்நாட்டு கத்தோலிக்க திருச்சபை தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2017 பிப்ரவரி 2 ஆம் தேதி, பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில் போதை மருந்து தடுப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டோருக்கு ஆயர் தியோகிராஸியாஸ் இனிகுவோஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட திருப்பலி பூசை

போதை மருந்து வர்த்தகர்கள் மற்றும் அதற்கு அடிமையானவர்களை இல்லாமல் ஆக்கும் அதிபரின் இந்த நடவடிக்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களைப் பற்றி காட்டப்படும் அலட்சிய மனோபாவம் மேலும் வருத்தத்துக்குரியது என்று திருச்சபை கூறியது.

ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸ் முழுவதும் நடைபெற்ற திருப்பலி பூசையின்போது மறையுரை நேரத்தில் திருச்சபையின் இந்த செய்தி வாசிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கொல்லப்பட்டோரின் புகைப்படங்களோடு திருப்பலியில் கலந்துகொண்ட உறவினர்கள்

காவல்துறையில் ஊழல் காரணமாக இந்த போதை மருந்து தடுப்பு நடவடிக்கையை டுடேர்டெ இடைநிறுத்திய ஒரு வாரம் ஆகாத நிலையில் திருச்சபையின் இந்த கருத்து வந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்