7 நாட்டு மக்கள் அமெரிக்கப் பயணத் தடை; அமெரிக்க நீதித்துறை மனு நிராகரிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த 7 நாடுகளின் மக்கள் மற்றும் அகதிகள் மீதான தடையை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த நீதித்துறை தாக்கல் செய்த வேண்டுகோளை, அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று மறுத்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Google
Image caption அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த தடை அமெரிக்கா முழுவதும் போராட்டங்களை தூண்டியிருந்தது

டிரம்ப் விதித்திருந்த தடைக்கு, சியாட்டல் நீதிபதி வழங்கிய தேசிய அளவிலான தற்காலிக இடைநிறுத்தத்திற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.

அரசின் இந்த மேல்முறையீட்டுக்கு, இந்த தடைக்கு எதிரானவர்கள் பதிலளிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் கோரியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

திங்கள்கிழமைக்குள் நீதித்துறை இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

தேசிய பாதுகாப்பு பற்றிய விடயத்தில் அதிபரின் முடிவைப் பற்றி, முடிவுக்குப் பிந்தைய கேள்விகளை இந்த தற்காலிக தடையை வழங்கியதன் மூலம் நீதிபதி எழுப்பியுள்ளார் என்று அவர் மீது டிரம்ப் நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

A US federal appeals court has denied a request from the Justice Department for an immediate reinstatement of President Trump's ban on travellers from seven countries and all refugees. The government had appealed against a temporary order by a judge in Seattle which blocked the ban nationwide. The appeals court has asked challengers of the ban to respond to the government's appeal. The Justice Department must file a counter response to that by Monday afternoon. The Trump administration has accused the judge behind the block of second-guessing the President on a matter of national security.