தீவிரவாத அமைப்புகளுக்கு இரையாகும் குழந்தை அகதிகள்: ஆய்வில் தகவல்

தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் போன்ற அமைப்புகள், போரிலிருந்து தப்பித்து, எந்த துணையும் இல்லாது தனியாக வரும் குழந்தை அகதிகளை தங்கள் அமைப்புகளில் சேர்த்துக் கொள்வதாக பிரிட்டனில் உள்ள ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

முகாமில் உள்ள சிறார்களை, மனித கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு பணம் தந்து, ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொள்ளச் செய்து, அவர்களின் விசுவாசத்தைப் பெற தீவிரவாத அமைப்புகள் முயற்சிக்கின்றனர் என தீவிரவாதத்திற்கு எதிரான குவில்லியம் என்ற அமைப்பு, நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த பயணத்தின் எந்த தருணத்திலும் இளம் உள்ளங்களில் தீவிரவாதக் கொள்கைகளை விதைக்க ஐ.எஸ் போன்ற அமைப்பினர் முயற்சிக்கின்றனர் என்றும் அது தெரிவிக்கிறது.

பிரிட்டனிற்கு தனியாக வரும் பல தஞ்சம் கோரும் சிறுவர்கள் காணாமல் போவதாகவும் மேலும் பாலியல் மற்றும் பொருளாதார துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்