தனது வர்த்தகம் பாதிப்பதால், இரான் மீதான அமெரிக்க தடைக்கு சீனா எதிர்ப்பு

சீன வர்த்தகங்களை பாதிப்பதாக கூறி, இரான் மீது அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் நிர்வாகம் விதித்திருக்கும் புதிய தடைகளுக்கு எதிராக சீனா அதிகாரபூர்வமான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது,

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டிரம்பின் பயணத்தடைக்கு எதிராக ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டம்

இரானின் ஆயுதம் வாங்கும் வலையமைப்பை இலக்கு வைப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கும் தடை பட்டியலில், சீனாவின் இரண்டு நிறுவனங்களும், மூன்று தனிநபர்களும் அடங்குகின்றனர்.

மூன்றாவது கட்சிகளை பாதிக்கின்ற ஒரு தலைபட்சமான தடை நடவடிக்கைகள் உதவியாக அமையாது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் லு காங் தெரிவித்துள்ளார்.

பேலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இரான் சோதித்த சிறிது நேரத்தில், டொனல்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் முதலாவது தடை நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்