நேரடி, நீண்ட விமான சேவையில் அதிகரிக்கும் போட்டி

தோஹாவிலிருந்து ஆக்லாந்துக்கு விமான சேவையை தொடங்கியுள்ள கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம், உலகின் மிக நீண்ட, இடையில் நிறுத்தங்கள் இல்லாத ,பயணியர் விமான சேவை இதுதான் என்று கூறுகிறது.

படத்தின் காப்புரிமை QATAR AIRWAYS
Image caption திங்களன்று ஆக்லாந்தில் தண்ணீர் தெளித்து வரவேற்கப்படும் கத்தார் போயிங் 777-200எல்ஆர் விமானம்

QR920 என்ற அந்த விமானம் திங்கட்கிழமை 16 மணி, 23 நிமிட நேரத்துக்குப் பின் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு சற்று முன்பாகவே தரையிறங்கியது.

புதிய பாதைகளில் வந்திறங்கும் விமானங்கள் மீது வழமையாக செய்யப்படுவதைப் போல இந்த போயிங் 777-200LR விமானத்தின் மீதும் குழாய்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

பொதுவாக விமான நிறுவனங்கள் இது போன்ற சாதனைகளை சற்று மிகைப்படுத்துவது வழக்கம். ஆனால், அவை எப்படி கணக்கெடுக்கப்படுகின்றன? உண்மையில் இந்தக் கணக்குகள் முக்கியமானவையா?

கணக்கிடுவது கடினம்

நீண்ட நேரம் மற்றும் அதிக தூரம் என்ற இரு விஷயங்களை வேறுபடுத்திக் காட்டுவது முக்கியம். ஆனால் அதைச் செய்வது அவ்வளவு எளிதானதல்ல.

கத்தார் விமான சேவையின் புதிய வழி நீண்ட நேரம் என்ற வகையில் நீண்ட பயணமாக இருக்கலாம். ஆனால் தூரம் என்ற அடிப்படையில் பார்த்தால், கத்தார் விமான சேவையின் 14,535கிலோமீட்டர் பயணம் எனபது நீண்ட துரம் பயணம் என்று சொல்லமுடியாது.

ஏனெனில், தூர அடிப்படையில், நீண்ட பயணப் பாதை என்ற சாதனையை தற்போது ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் டெல்லி-சான் பிரான்சிஸ்கோ சேவை (15,127 கிலோமீட்டர்) பெற்றுள்ளது.

பாதை - காற்று வேகம்

இரண்டு நகரங்களுக்கிடையே உள்ள தூரம் விமான நிறுவனங்களைப் பொறுத்து மாறாதுதான். ஆனால் அந்நிறுவனங்கள் வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கக்கூடும்.

உதாரணமாக, ஒரு விமான நிறுவனம், சில குறிப்பிட்ட நாடுகள் மீது பறப்பதைத் தவிர்ப்பது ஒரு விமானம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடையே செல்ல எவ்வளவு தூரத்தைக் கடக்கவேண்டியிருக்கிறது என்பதை மாற்றியமைக்கும்.

ஆனால் பாதைக்கு அப்பால், விமானப் பயணத்துக்கு ஆகும் நேரம் என்பது , பறக்கும் விமானத்தின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் வீசும் காற்றின் வேகத்தைப் பொறுத்தே அமைகிறது.

உதாரணமாக, கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் ஆக்லாந்து-டோஹா பயணம் விமானத்துக்கு முன் பகுதியில் வீசும் காற்றின் வேகம் காரணமாக 18 மணி நேரங்கள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

``நீண்ட பறக்கும் நேரம் என்பது நீண்ட பறக்கும் தொலைவு என்பதாக எல்லா நேரத்திலும் மாறாது`` என்று ஃப்ளைட் க்ளோபல் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த எல்லிஸ் டெய்லர் கூறுகிறார்.

`` நிச்சயமாக, பயணியின் பார்வையிலிருந்து பார்க்கும்போது, பறக்கும் நேரம்தான் முக்கியமாக அளவீடு`` என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை QATAR AIRLINES
Image caption கத்தார் விமான நிறுவனத்தின் தோஹா-ஆக்லாந்து பயணத்தில் நான்கு விமானிகள், 15 விமான பணியாளர்கள் இருந்தனர் . 2,000 குளிர் பானங்கள் பயணிகளுக்கு அளிக்கப்பட்டன.

வணிகத்திற்கு அவசியம் நெடுந்தொலைவு விமானங்கள்

சாதனையை முறியடிக்கும் விமானச் சேவைகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கலாம். ஆனால் புதிய நீண்ட தொலைவு செல்லும் விமானச் சேவைகள், தனியாக ஒரே பயணமாக அமைந்தால் அதன் மூலம் பலன் ஒன்றும் இருக்காது என்கிறார் டெய்லர்.

ஆனால், ஒரு புதிய பாதை விமான நிறுவனத்தின் ஏற்கனவே இருக்கும் போக்குவரத்து வலையமைப்புக்கு என்ன சேர்க்கிறது என்பது முக்கியம்.

தனியே, ஆக்லாந்து-தோஹா பயணம் என்பது பெரிய அளவில் லாபமீட்டும் ஒரு பாதையாக இருக்காது. ஆனால் ஆக்லாந்திலிருந்து வரும் பயணிகள் ஐரோப்பாவுக்கு , ஆப்ரிக்கா, அமெரிக்கா மற்றும் பிற இடங்களுக்குச் செல்கிறார்களா என்பதில்தான் கத்தார் ஏர்வேஸ் கவனம் செலுத்துகிறது என்கிறார் அவர்.

இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், ஒரு பாதையில் சேவை லாபத்தைத் தருவதற்கு சற்று காலம் பிடித்தாலும், அது அந்த நிறுவனத்தின் பரந்துபட்ட வலையமைப்பின் லாபத்துக்கு உதவும்``, என்கிறார் அவர்.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், பெரும்பாலான பிரதான நீண்ட பாதைகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கண்டாஸ் போன்ற நெடிய பாரம்பரியம் கொண்ட விமான நிறுவனங்களால் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் போன்ற புதிய நிறுவன்ங்களும், புதிய நீண்ட பாதைகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் தங்களது வணிகத்தை வேகமாக விரிவாக முடிந்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உலகின் நீண்ட விமான பயண வழிகளில் ஆஸ்திரேலியாவின் கண்டாஸ் விமானம் பயணிக்கிறது

அது மத்திய கிழக்கு விமான நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவைகளின் சேவை எந்த அளவுக்கு எட்டுகிறது என்பதில் இருக்கும் போட்டியைப் பற்றிய விஷயம் என்கிறார் ஏர்லைன் ரேட்டிங்ஸ் ( Airlineratings.com) என்ற விமானசேவை குறித்த இணையதளத்தை சேர்ந்த ஜியோஃப்ரே தாமஸ்.

சாதனைகள் முறியடிக்கப்படுவதற்கே

இந்த நீண்ட தொலைவு விமான சேவை சாதனைகள் எல்லாம், விமான நிறுவனங்கள் புதிது புதிதாக சேவைகளைத் தொடங்குகையில், தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும்.

உதாரணமாக, கடந்த ஆண்டு, கண்டாஸ் நிறுவனம், பெர்த்திலிருந்து லண்டனுக்கு, 2018ம் ஆண்டு மார்ச் வாக்கில் நேரடி விமான சேவை ஒன்றைத் தொடங்கப் போவதாக அறிவித்தது. இது 17 மணி நேர பயணம். புதிய பாதைகளை விமான நிறுவன்ங்கள் தேர்ந்தெடுப்பதைத் தீர்மானிக்கும் அம்சங்களாக, எரிபொருள் விலை மற்றும் எந்த விமான வகைகளை வாங்குவது என்பவை இருக்கின்றன.

777-8X போன்ற விமான்ங்கள் 2022ம் ஆண்டு வாக்கில் வரும் நிலையில், சிட்னி-நியுயார்க், சிட்னி-லண்டன் போன்ற புதிய சாதனைகள் நிறுவப்படும், என்கிறார் தாமஸ்.

இந்த 777-8X விமானம் முறியடிக்கமுடியாத நீண்ட தூரம் செல்லும் விமானமாக இருக்கும், என்கிறார் அவர்.

ஆனால் இந்த பாதைகள் லாபகரமாக இருக்க வேண்டுமெனில், அவைகளில் மக்கள் பயணிக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அது , மக்கள் 16,17, 18 மணி நேரங்கள் விமானத்தில் உட்கார்ந்து பயணிக்கத் தயாராக இருக்கிறார்களா என்பதைப் பொறுத்தது. அந்த விருப்பம் எவ்வளவு காலம் நீடிக்கும் - குறிப்பாக பயணிகள் நெரிசலில் பயணிக்கும், எக்கானமி பிரிவில் - என்பதை விமான நிறுவனங்கள் கவனமாகப் பரிசீலிக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உலகின் நீண்ட விமான பயண வழிகளில் ஆஸ்திரேலியாவின் கண்டாஸ் விமானம் பயணிக்கிறது

உதாரணமாக, கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவின் விமான சேவை நிறுவனமான கண்டாஸ் பெர்த் முதல் லண்டன் வரை 17 மணி நேர சேவையை மார்ச் 2018ல் மேற்கொள்ள போவதாக தெரிவித்திருந்தது.

புதிய வழிகளை தொடங்குவதற்கு, எரிபொருளின் விலை மற்றும் எந்த விதமான விமானத்தை பயன்படுத்தவுள்ளோம் என்ற அம்சங்கள் தீர்மானிக்கும்.

2022ல் 777-8X ரக விமான அறிமுகமானால், சிட்னியில் இருந்து நியூயார்க் மற்றும் லண்டனுக்கு செல்லும் பயணம் புதிய சாதனையை நிகழ்த்தப்படும். 777-8X ரக விமானம் நெடுந்தொலைவு பயணிக்கும் விமானம்,'' என்றார் தாமஸ்.

ஆனால், புதிய வழிகள் சாத்தியமானதாக இருக்க வேண்டும் என்பது பயணச்சீட்டு வாங்க மக்கள் தேவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்றார்.

ஒரே இடத்தில் சுமார் 16,17 அல்லது 18 மணி நேரம் ஒரே இடத்தில் இருக்க ஒருவர் விருப்பம் உள்ளவராக இருப்பாரா என்பதை பொருத்து உள்ளது. இது போன்ற நெடுந்தொலைவு பயணங்களை மேற்கொள்ள பயணிகள் எவ்வளவு காலம் விருப்பத்துடன் இருப்பார்கள் என்பதையும் விமான நிறுவனங்கள் கண்காணிக்கும். அத்துடன் பயன்செலவு குறைவாக இருக்கும் சாதாரண வகுப்பில்(economy) தான் அதிக எண்ணிக்கையில் பயணிகள் தேர்தெடுப்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்