பிரஞ்சு அதிபர் தேர்தல்: வெல்வாரா வலதுசாரி வேட்பாளர்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரஞ்சு அதிபர் தேர்தல்: வெல்வாரா வலதுசாரி வேட்பாளர்?

பிரான்ஸ் அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் இருந்த பிரான்ஸுவாங் ஃபியாங் தற்போது பின் தங்கியிருக்கிறார்.

காரணம் தன் மனைவி வேலை செய்ததாக போலியாக கணக்கு காட்டி பல ஆயிரம் யூரோக்களை சம்பளமாக கொடுத்தார் என்கிற குற்றச்சாட்டுக்கள் அவருக்கான பொதுமக்களின் ஆதரவை பெருமளவு குறைத்திருக்கிறது.

இவரை எதிர்க்கும் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பாளரும் தேசியவாதியுமான மெரின் லுபென், கருத்துக்கணிப்புகளில் இவரைவிட முன்னணியில் இருக்கிறார்.

சென்ற ஆண்டு கட்சியைத்துவக்கிய மெக்காவ்ங் மெரின் லுபென்னைவிட முன்னணியில் இருக்கிறார்.

இதன் மூலம் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் யாரும் வெல்லலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது.