ஜெயலலிதாவின் வீட்டில் அதிமுக அமைச்சர்கள் , பிரமுகர்கள் ஆலோசனை

படத்தின் காப்புரிமை Getty Images

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை மேற்கொள்ள மறைந்த ஜெயலலிதாவின் வீடு அமைந்துள்ள போயஸ் தோட்டத்திற்கு விரைந்துள்ளனர்.

தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிற ஒ. பன்னீர் செல்வம், தன்னை கட்டாயப்படுத்தித்தான் ராஜினாமா செய்ய வைத்ததாக ஜெயலலிதாவின் சமாதிக்கு அருகில் வைத்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததை அடுத்து தமிழகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்தார்கள்: ஓ. பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு

அதற்கு முன்னதாக இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் ஜெயலலிதா சமாதியில் அமைதியாக உட்கார்ந்து தியான நிலையில் பன்னீர் செல்வம் இருந்தார்.

ஊடகங்களும், பொது மக்களும் அந்த நேரத்தில் அங்கு குழுமத் தொடங்கினர்.

சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக அவ்வாறு தியான நிலையில் மௌனமாக இருந்த அவர், கண்ணீரை துடைத்துகொண்டு அந்த வளாகத்திலேயே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

இந்த நிலையை சமாளிப்பது தொடர்பாக தற்போதைய அதிமுகவின் பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவருமாக இருக்கின்ற வி.கே.சசிகலா தங்கியிருக்கின்ற போயஸ் தோட்டத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விரைந்து சென்றடைந்து வருகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்