சிரிய இராணுவச்சிறையில் 13,000 பேர் கொலை: அம்னெஸ்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரிய இராணுவச்சிறையில் 13,000 பேர் கொலை: அம்னெஸ்டி

2011 முதல் 2015 ஆம் ஆண்டுக்குள் சிரியாவில் இருக்கும் இராணுவச் சிறையில் 13000 பேர் கொல்லப்பட்டதாக அம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அந்த சைண்டயா சிறையின் முன்னாள் கைதிகள் மற்றும் காவலர்கள் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் அம்னஸ்டி இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

கைதிகள் தூக்கிலிடப்பட்டு, அவர்களது சடலங்கள் பெரும் மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.