டிரம்ப் நியமித்த நபரை அட்டார்னி ஜெனரலாக உறுதி செய்தது அமெரிக்க செனட் அவை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ் என்ற அலபாமா செனட் உறுப்பினர் நியமனத்தை அமெரிக்க சென்ட் அவை உறுதி செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption டிரம்ப் நியமித்த அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ்

இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில், ஜெஃப் செஷன்ஸுக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 47 வாக்குகளும் கிடைத்துள்ளன.

ஜெஃப் செஷன்ஸின் நியமனம் தொடர்பாக இரு வேறு கருத்துக்களால் தொடர்ச்சியாக பிளவுபட்ட சென்ட் அவையின் விசாரணைக்கு பிறகு, ஜெஃப் செஷன்ஸ் அட்டார்னி ஜெனரலாக உறுதி செய்யப்பட்டுள்ளார்.

இந்த விசாரணையின் போது சிவில் உரிமைகள் தொடர்பாக ஜெஃப் செஸின் முந்தைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை ஜனநாயக கட்சியினர் எதிர்த்தனர்.

டொனால்ட் டிரம்பின் மிகவும் சர்ச்சைக்குரிய நியமனங்களில், அலபாமா சென்ட் உறுப்பினரான ஜெஃப் செஷஸின் நியமனமும் ஒன்றாகும்.

பெரும்பாலும் இந்த வாக்கெடுப்பு கட்சி நிலைப்பாட்டின்படியே நடந்தது. மேற்கு வர்ஜீனியாவை சேர்ந்த ஜோ மன்சின் என்ற ஜனநாயக கட்சியின் சென்ட் உறுப்பினர் மட்டுமே ஜெஃப் செஷன்ஸுக்கு வாக்களித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்