மகளின் ஆடை தயாரிப்பை விற்க மறுத்த நிறுவனம் மீது டிரம்ப் விமர்சனம்

தனது மகள் இவான்கா உரிமையாயாளராக உள்ள ஒரு நவநாகரீக ஆடை தயாரிப்பை தங்களின் விற்பனையிலிருந்து நிறுத்திய ஒரு ஆடை விற்பனையாளர் மீது தாக்குதல் தொடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு ஜனநாயக கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption மகளின் ஆடை தயாரிப்பை விற்க மறுத்த நிறுவனம் மீது டிரம்ப் விமர்சனம்

'மிகவும் 'நியாயமற்ற முறையில் இவான்கா நடத்தப்பட்டுள்ளார்'' என்று சில்லரை ஆடை விற்பனையாளரான நார்ட்ஸ்ட்ரம் குறித்து தனது ட்விட்டர் பதிவில் டொனால்ட் டிரம்ப் கருத்து வெளியிட்டார்.

டொனால்ட் டிரம்பின் இந்த ட்விட்டர் பதிவை பொருத்தமற்ற பதிவு என்று ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒரு செனட் உறுப்பினர் கருத்து தெரிவித்திருக்கும் வேளையில், நெறிமுறைகளின் தலைவரான ஒரு முன்னாள் வெள்ளை மாளிகை அதிகாரி டிரம்பின் கருத்தை மூர்க்கத்தனமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

முன்னதாக இந்த மாதத்தில், போதுமான அளவு விற்பனையில்லை என்ற காரணத்தை குறிப்பிட்டு, இவான்கா டிரம்பின் ஆடை தயாரிப்பை கைவிட்ட ஐந்தாவது ஆடை விற்பனையாளர் நார்ட்ஸ்ட்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்