சீகல்ஸ் கடற்பறவைகள்: அச்சுறுத்தும் அழகு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீகல்ஸ் கடற்பறவைகள்: அச்சுறுத்தும் அழகு

கடற்கரைகளின் ஒரு அங்கமாக இருக்கும் சீகல் என்கிற அழகான கடற்பறவைகள், பிரிட்டனின் கடலோர நகரவாசிகள் சிலருக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளன.

இவை மனிதர்களை ஆக்ரோஷமாக தாக்குவதாகவும், கையில் கொண்டுசெல்லும் உணவை பறித்துச்செல்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அரசியல்வாதிகள் கூடி விவாதித்தனர்.