நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் நூற்றுக்கணக்கானவை இறப்பு

நியூசிலாந்து கடற்கரையேரம் ஒதுங்கிய பிறகு, நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் இறந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி இறந்து கிடக்கும் திமிங்கலங்கள் (கோப்புப்படம்)

இந்த தீவின் தெற்கு முனை பகுதியில், தொலைதூர கடற்கரையான ஃபேர்வெல் ஸ்பிட் என்ற இடத்தில் பைலட் திமிங்கலங்கள் கண்டறியப்பட்டன.

இன்னும் அங்கு உயிருடன் இருக்கின்ற நூற்றுக்கணக்கான திமிங்கலங்களை காப்பாற்ற விலங்குகள் நல பாதுகாப்பு துறை ஊழியர்களும், தொண்டர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், அவை நல்ல உடல் நலத்தோடு இருப்பதாக எதிர்பார்க்கவில்லை என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஃபேர்வெல் ஸ்பிலிட் கடற்கரையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது பொதுவாக நிகழ்வதுதான் என்றாலும், இதுவரை தெரிந்தவற்றில் இதுவே மிகவும் மோசமான சம்பவமாகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்