டென்மார்க் : இரு பள்ளிகளை தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக சிறுமி ஒருவர் மீது குற்றச்சாட்டு

டென்மார்க்கில் பதினாறு வயது சிறுமி ஒருவர் இரு பள்ளிகளை வெடிகுண்டு மூலம் தகர்க்க சதித்திட்டம் தீட்டினார் என்று அங்குள்ள அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

அந்த சிறுமி தகர்க்க நினைத்ததாக கூறப்படும் இரு பள்ளிகளில் ஒன்று யூத பள்ளியாகும்.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய அந்த சிறுமி வெடிகுண்டுக்கு தேவையான பொருட்களை தயார் செய்தார் என்று வழக்கறிஞர் லிஸே லோட்டி நிலாஸ் கூறியுள்ளார்.

25 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட அதே சமயத்தில் அந்த சிறுமி எவ்வித குற்றச்சாட்டுகளின்றி விடுவிக்கப்பட்டார்.

சிரியாவுக்கு இருமுறை சென்றுள்ள அந்த வாலிபர் சிறுமிக்கு வெடிகுண்டுகள் செய்வது எப்படி என்பதை காண்பித்துள்ளார் என்று விசாரணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்