ஆஃப்கானிஸ்தான் : லஷ்கர் காவில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் ஆறு பேர் கொலை

ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தின் தலைநகரான லஷ்கர் காவில், முக்கிய வங்கி ஒன்றின் வெளியே கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நிகழ்ந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும், 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கிறார்கள் என்றும் மாகாண ஆளுநரின் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பொதுமக்கள் அவர்களின் சம்பளத்தை பெறுவதற்காக வங்கியில் வரிசையாக நின்றிருந்த போது, வங்கிக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆஃப்கன் தேசிய ராணுவத்தின் வாகனம் மீது வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட காரை குண்டுதாரி செலுத்தியதாக அந்த பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலை தாங்கள் நிகழ்த்தியதாக தாலிபன் பொறுப்பேற்றுள்ளது.

இதற்கு முன்பும் இதே வங்கியை அவர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்