கலிஃபோர்னியா அணை உடையும் ஆபத்து: 1.3 லட்சம் பேர் வெளியேற்றம்

காணொளி: கலிஃபோர்னியா அணை உடையும் ஆபத்து

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கலிஃபோர்னியா அணை உடையும் ஆபத்து

கனமழை காரணமான அமெரிக்காவின் மிகவும் உயரமான அணை பலவீனமடைந்திருப்பதை அடுத்து, கலிஃபோர்னியாவின் வட பகுதியிலுள்ள குறைந்தது ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP

770 அடி (230 மீட்டர்) உயரமுள்ள ஒரெவெல் அணையின் நீர் நிரம்பி வழியும் அவசர நீர் வெளியேற்ற வழித்தடம் எந்த நேரத்திலும் உடையலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அணை உடையும் ஆபத்து நிலவுவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

கனமழையாலும், பல ஆண்டுகளை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பனியாலும் இந்த நீர்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இந்த அணையின் 50 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக ஒரேவெல் ஏரி இத்தகைய அவசர நிலையை சந்தித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP

இந்த எரியின் நீர்தேக்க அளவை குறைக்க நிமிடத்திற்கு ஒரு லட்சம் கன அடி (2,839 கன மீட்டர்) தண்ணீரை வெளியேற்ற முயல்வதாக கலிஃபோர்னியாவின் நீர்வள ஆதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

எனவே, இந்த நீர்தேக்கத்திலுள்ள நீரின் அளவு குறைவதாகவும், நீர் நிரம்பி வெளியேறும் அவசர நீர் வெளியேற்று வழிதடத்தில் நீர் வெளியேறுவது நான்கு அங்குல உயரத்திற்கு குறைந்திருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

கலிஃபோர்னியாவின் ஒரெவெல் அணையை சுற்றிய பகுதியின் ஷெரீஃப், இது பயிற்சி அல்ல என்று எச்சரித்து, அங்கு வசிப்போர் வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை, இந்த நீர்தேக்கத்தில் நீர் நிரம்பி வழியும் அவசர வழித்தடத்தில், மிகப் பெரிய கான்கிரீட் பாளங்கள் காணாமல் போயிருப்பதை கண்ட பொறியாளர்கள் அணையில் இருந்து நீரை வெளியேற்ற தொடங்கினர்.

சாக்கிரமென்டோவுக்கு வடக்கே 65 மைல்கள் (105 கிலோமீட்டர்) இருக்கும் ஒரெவெல் நகரத்தில் வாழும் 16 ஆயிரம் மக்கள் அனைவரும் வட பகுதி நோக்கி சென்று வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இதனால் பாதிக்கப்படுகின்ற பிற நகரங்கள் அவற்றின் உள்ளூர் சட்ட அமலாக்க முகமைகளின் ஆணைகளை பின்பற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

புயல்களால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளின் காரணமாக வழங்க வேண்டிய பெரிய இடர்பாட்டு தொகையை அறிவிக்க வெள்ளிக்கிழமையன்று கலிஃபோர்னிய ஆளுநர் ஸெர்ரி பிரவுண் மத்திய அவசர கால மேலாண்மை முகாமையிடம் கேட்டுகொண்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்